நீண்டுகொண்டே செல்லும் இத்தூரத்தை
இதோ இதோ எனத்தேற்றி
இனியும் கடக்க முடியாது
துவண்டு மீண்டும் துவண்டு
தன்னைத் தானே இடறிக்கொள்ளும் கால்கள்
இனியும் என்னை எங்கும் கொண்டு சேர்க்காது
தசைகள் கிழித்து இறுக்கக் கட்டிய கட்டவிழ்ந்து
திசைக்கொன்றாய் தெறித்து ஓட
என்னில் எதுவும் மிச்சமில்லை
அடுத்த அடி நான் எடுத்து வைப்பதென்றால்
நான் பற்றிக்கொள்ள ஒரு பிடியைத் தருவாய்
எனைத் தேற்றியெடுத்து தாங்கிக் கொள்ள
நீ படைத்ததிலே எது உறுதியானதோ
அதை எனக்குத் தருவாய் எனக் கேட்டேன்
பூக்களிலே மெல்லிய பூ இது தான்
இனி இது உன் பொறுப்பு எனத் தந்து
அர்த்தத்தோடு சிரித்துப் போகிறான்
/25th March, 2007
2 comments:
அற்புதம் !!!
பூக்களையும் அதன் மென்மையையும் சாதாரணமாக எடை போட கூடாது.. அவை மிகவும் சக்தி வாய்ந்தவை.. மனதை சிலிர்த்தெழச் செய்து, துவண்டு கிடக்கும் கால்களுக்கு வலிவூட்டி நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக நடக்க வைக்கும் வல்லமை படைத்தவை..
:-)
(Sounds too optimistic !!!.. Can't help it man !)
Thanks dude..
கவிதையின் மொத்த அர்த்தத்தையும் இரத்தினச்சுருக்கமாக உன்னுடைய comment-ல் நீ சொல்லிவிடும் போது இதைத் தான் நான் சுற்றி சுற்றி மெனக்கெட்டு நீண்ட கவிதையாக எழுதுகிறோனோ என்று சில நேரம் தோன்றுகிறது :)
Post a Comment