Thursday, July 19, 2018

தடயமின்றி

எப்படியேனும் பொருள் சேர்

பங்குச்சந்தையில்
பணம் போட்டு பின் அலை

கள்ளம் பழகு
கவனமாய் மறை

நேர்த்தியாய் கை குலுக்கு
கேட்பவர் விரும்புவதை பேசு
இயல்பாக பொய் சொல்
முன்னே சிரி
பின்னே வீழ்த்து

பகட்டாய் இரு
எளியோர் மேல் ஏறு
உன் பலகீனத்தில்
கவனம் விழாமல்
திசை திருப்பு

பொதுவில் தெரியும் உன் பிம்பம்
பார்த்துப் பார்த்து செதுக்கு
மற்றதெல்லாம் பதுக்கு

பிழைக்கத் தெரிந்தவனாய்
நிறைவாக வாழ்ந்து முடி
எந்த இடத்திலும்
தடயமின்றி செத்து மடி


Friday, July 13, 2018

பேச்சு

மூன்று நாட்களாக
அடிக்கடி மூச்சுத்திணறல்

பனியிலும் வியர்த்துக் கொட்டி
ஒரே இறுக்கம்

மார்பில் ஓங்கி மிதித்து
கழுத்தைப் பிடித்தறுப்பது போல்
பரவும் வலி

என் தவறு தான்
பரணில் கிடந்த
பழைய நினைவுகளை
நான் தூசு தட்டியிருக்கக் கூடாது

நெஞ்சாற பேச வேண்டும் நண்ப
முடிந்தால் கொஞ்சம்
வந்து போ

Friday, February 23, 2018

Aftermath

when I was a kid
you left me in war field
and disappeared

I grew up in chaos
fought for many years
some part of me dead, but -
I managed to survive the war

as I limped my way back to peace
to the freedom I earned
what killed me
was the thought that
you abandoned me