Thursday, November 30, 2006

தலைமுறை

வாழ்த்துக்கள்.
பூங்காற்றில் தலையசைக்கும் பூக்களெல்லாம்
புயற்காற்றில் வேரழியும் விபரமேதும் அறியாமல்
என் கவசங்களைக் கொடுத்துவிட்டு
கைமுறுக்கு வாங்கிக் கொறித்தபடியே
இராட்டினம் பார்த்துக் கிறுகிறுத்து
நிராயுதபாணியாய் நின்றிருந்த என்னை
சரிவுகளின் கீழே இருண்ட பள்ளத்தில்
ஆக்ரோஷமாய் வீழ்த்திக்கொண்டமைக்கு
வாழ்த்துக்கள்.

என்மீது கவிழ்ந்துவிட்ட இருள்வெள்ளம்
கண்ணீர் கசிந்த வழியே
உள்ளேயும் புகுந்து நிறைக்க
அருவருத்து கூனி குறுகி சிறுத்து
மூச்சுத்திணறி மூழ்கத்தொடங்கி
முழுமையாய் மரணித்தாலும்
கரையொதுங்கிய என் சவத்தை
தோளில் சுமந்தபடியே நான் எழுந்து நின்றது
நாக்குச்சவுக்கை சொடுக்கிக்கொண்டே
எங்கிருந்தோ நீ கொக்கரிக்கும் ஓசையில் தான்.

என் ஆற்றாமையின் கேவல்கள் அடங்கி
உள்ளெரியும் தீயில் விழிகளுக்கு ஒளியூட்டி
புலன்களெல்லாம் கூர்மையாக்கி
சலனங்களின் ஆணிவேர் அறுத்து
வெளிப்பூச்சின் பின்நெளியும் புழுக்கள் கண்டறிந்து
கவனமாய் இரண்டடிகள் நான் எடுத்து வைக்க -
உன் திகைப்பை மறைத்துக் கொண்டு
என் உடலெங்கும் அப்பிக்கிடக்கும் தழும்புகளையும்
காய்த்துப்போன என் கைகளையும்
விகாரம் எனச்சொல்லி மகிழ்கிறாய்.

நன்று, இன்னும் சற்றுப்பொறு.
என் பரிபூர்ணத்தின் ஒளிப்பிழம்பில்
உதித்து வரும் தலைமுறை
வாள் உருவும் ஓசையில்
உன்னதுதன் பின்னங்கால் பிடரிபட
தெறித்து ஓடக் காண்பாய்.

/30th Nov, 2006.

Saturday, November 11, 2006

விசும்பல்

என் நரம்புகளின் முடிச்சிலிருந்து
விண்ணென்று தெறித்துப் புறப்பட்டு
வீரியம் குறையாமல்
நெடும்பாதை பயணப்பட்டு
மூளைச்சிக்கல்களில் அமைதியாய் ஊடுருவி
சற்றும் எதிர்பாராமல்
துல்லியமான ஓர் அதிர்வுக்கோளத்தை
நாற்புறமும் வெடித்துப் பரவ விட்டு
உறைந்திருந்த பக்கங்களில்
அடர்மின்னலை சீறிப்பாய்ந்து
சிலிர்த்தெழுந்த உணர்வுகள் தறிகெட்டோடி
வார்த்தைச்சுரங்கத்து இருட்டில்
தேடித் துழாவி ஏதும் கிடைக்காமல்
அத்தனை அவஸ்தைகளும்
மெல்லிய விசும்பலாய் வெளிப்பட்டு
மரணித்து அமைதியானபின்
மற்றொன்று...

/11th Nov, 2006

Friday, November 10, 2006

Between Night and Morn

Another favourite from Khalil Gibran's "Between Night and Morn".

Be silent, my heart, until Dawn comes;
Be silent, for the ranging tempest is ridiculing
Your inner whispering, and the caves of
The valleys do not echo the vibration of
Your strings.
~
Be silent, my heart, until Morn comes;
For he who awaits patiently the coming
Of Dawn will be embraced longingly by
Morningtide.
~
Dawn is breaking. Speak if you are able,
My heart. Here is the procession of
Morningtide.... Why do you not speak?
Has not the silence of the night left
A son in your inner depths with which
You may meet Dawn?
~
Here are the swarms of doves and the
Nightingales moving in the far portion
Of the valley. Are you capable of flying
With the birds, Or has the horrible night
Weakened your wings?
~
The shepherds are leading the sheep
From their folds; Has the phantom of the night
Left strength in you so you may walk behind them
To the green prairies?
~
The young men and women are walking
Gracefully toward the vineyards.
Will you be able to stand and walk with them?
~
Rise, my heart, and walk with
Dawn, for the night has vanished with
Its black dreams and ghastly thoughts and
Insane travels.
~
Rise, my heart, and raise your voice with
Music, for he who shares not Dawn with
His songs is one of the sons of ever-
Darkness.
================
This reminds me that life isn't about getting stuck in anything; it's about gathering all the strength it takes to move on, no matter how hard the journey is. Thanks Mr.K.G.

Thursday, November 9, 2006

Good old days !!


Drawing has also been my passion in my school days. I am not good at water-coloring my drawings. So from past experience, I always prefer to stay with black & white pencil drawing. What remains of my drawing ventures is this sketch, made in 1999. Those College days!! I should thank my good friend for having recovered this sketch, in e-format. Athu Oru Azhagiya Kanaa Kaalam !!

Nowadays this passion has come down to merely spending few minutes glancing through Art books in Higginbothams.

Tuesday, November 7, 2006

The "too" factor

I recently bought omnibus edition of "The greatest works of Kahlil Gibran". He had a message for me in his "The Wanderer - His Parables and His Sayings". The message was in a parable titled "Body and Soul" that seriously made me think about the "ground reality". Read it first:
==========
Body and Soul
==========
A man and a woman sat by a window that opened upon Spring. They sat close one unto the other. And the woman said,"I love you. You are handsome, and you are rich, and you are always well-attired".

And the man said,"I love you. You are a beautiful thought, a thing too apart to hold in the hand, and a song in my dreaming".

But the woman turned from him in anger, and she said,"Sir, please leave me now. I am not a thought, and I am not a thing that passes in your dreams. I am a woman. I would have you desire me, a wife, and the mother of unborn children".

And they parted.

The man was saying in his heart,"Behold another dream is even now turned into the mist".

And the woman was saying,"Well, what of a man who turns me into a mist and a dream?".
============================================

So, too much of anything is good for nothing. Be it too soft or too rough, too rich or too poor, too good or too bad, any form of "extremism" is not the best way to live your life. There should exist a balance - knowing exactly where to draw the line, where to stop - and those who reach this balance live a better life. I like this concept. Should learn to practise :)

Monday, November 6, 2006

குறை

கறுத்த மேகம் அனுப்பி வைத்த
தூய மழைத்துளிகளை
அழுக்குப் பாத்திரத்தில் ஏந்திவிட்டு
'அப்பனுக்கு பிள்ளை தப்பாமல்' என
அலுத்துக் கொள்வதேன்
மேகத்தை.

/6th Nov, 2006

Saturday, November 4, 2006

எ.பி.சு.ரா.க - 4

=============================
கதவைச் சுண்டாதே தயவுசெய்து
=============================
நான் இங்கு இருக்கிறேன்.
இங்கு இச்சிறிய அறையில்.
சிறிய சன்னல் சிறிது வெளிச்சம்.

தயவுசெய்து உன் ஆள்காட்டி விரலின் நகத்தால்
சாத்தியிருக்கும் என் கதவைச் சுண்டாதே
எனக்கு உன் ஓசைகள் தெரியும்
உன்னைத் தெரியும்
உன்னிடம் எவ்வளவு என்பதும் தெரியும்.

என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியைக் கட்டக் கடைசி நாள் கேட்பாய்
பங்குகள் சரிவதுபற்றி விசனமுடன் பேசுவாய்
தொலைபேசி எண் என்ன என்பாய்

கையாலாகாதவன் என என்னைச் சொல்லாமற் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும்பாரம்

சரித்துவிட்டுப் போவாய்
"ஒரே ஒரு கவிதை"
போதும் இந்த ஜென்மம் பொருள்பட

என்பது என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலின் நகத்தால்

என் கதவைச் சுண்டாதே
தயவுசெய்து.

- சுந்தர ராமசாமி 1985


பிரமிக்க வைக்கும் தூய்மையான உறுதியான நம்பிக்கை. இந்த கவிதையை சு.ரா. எழுதிய போது அவருக்கு வயது 54 இருக்கும். 27 வயதில் இப்படியெல்லாம் நான் கவிதையில் நம்பிக்கை வைத்தால் என் வீட்டில் தலையில் குட்ட வருவார்கள் :)) so இந்த கவிதை தரும் செய்தியை let me generalise - "have passion for your work, no matter what".

மனத்தளத்தில் சில குறிப்புகள்

உங்களை கறைப்படுத்தும்
அழுக்குகள் இங்கு இல்லை.
உங்கள் காலணிகளை கழற்றி விடலாம்
நீங்கள் விரும்பினால்.

என் காயங்களின் பரிமாணங்கள்
இங்கு காட்சிக்கு இல்லை.
உங்கள் தேவைக்கு வாசிக்க
அதன் பாடங்கள் மட்டுமே
தரப்பட்டிருக்கின்றன.

உங்கள் கணிப்பில் என் குற்றங்களை
முகம் பார்த்துச் சொல்லுங்கள்.
இல்லாமற் போனால்
நம்மால் திருத்த இயலாது
என் பிழைகளையோ
உங்கள் பிழைகளையோ.

ஆர்ப்பரிக்கும் உங்கள் படோடாபங்கள்
இன்னும் சற்று தள்ளியே நிற்கட்டும்.
இங்கு நான் கேட்க விழைவது
உங்கள் ஆழ்மனத்தில் ஓடும்
தெள்ளிய நீரின் ஓசையை.

சிரம் தாழ்த்தி துதிபாடி
நீங்கள் பூரிக்கும் வரை பூச்சொரியும்
வசதிகள் இங்கு இல்லை.
ஆத்மார்த்தமான அன்பிற்கு
சத்தமில்லாமல்
பூவொன்று இங்கே பூத்து
உங்கள் முகம் பார்த்து நின்றிருக்கும்.

மூச்சுத்திணற இறுகப் பிணைத்து
முடிந்த மட்டும் சுரண்டிப் பார்க்க
உறவுக்கயிறுகள் திரிப்பதில்லை.
உங்கள் பெயரை இங்கே எழுதி விட்டு
வானம் பறந்து வாருங்கள்.

என் மனத்தளம் வந்தடையும் பாதைகள்
வெறிச்சோடிக் கிடக்க,
காத்திருக்கிறேன்.

/4th Nov, 2006