நீண்டநாள் பயணத்தில்
என்னோடு எனக்கு
மிக நெருக்கமான பழக்கம்.
என்னைப் போலவே என்னை அறிந்து கொள்ள
என்னோடு பயணிக்கும் தேவைகள்
என்றுமே உங்களுக்கு இருந்ததில்லை என்றாலும்
ஆளுக்கொரு விதமாய் அலங்கரித்து
என்னை என்முன் நீங்கள் நிறுத்தும் போது
'அது நான் அல்ல, நீங்கள் தான்' என்று
நான் விழுந்து சிரிக்காமல் சொன்னாலும்
கோபம் வருகிறது உங்களுக்கு.
சரி போகட்டும்
நீங்கள் அறியாத என்னை
நான் விளக்கிச் சொல்லவா என்றால்
நான் அறியும் என்னைவிட
நீங்கள் அறியும் நான்
உங்களுக்குச் சரியாக இருப்பதே
எனக்கு நல்லது என்ற அறிவுரை சொல்லி
புறப்பட்டு விடுகிறீர்கள்.
என்னோடு என் பயணம் தொடர்கிறது
நீங்கள் இல்லாமலே.
/14th March, 2007
6 comments:
ஹ்ஹா ! ஹ்ஹா !! ஹ்ஹா !!!
தனியாக பயணிப்பது என்று முடிவு செய்து விட்டு பின்னர் இப்படி புலம்புவது நன்றாக இல்லை நண்பரே !!!
:-)
Anand, bad bad server.. no donut for you :)))
இது புலம்பல் இல்லை. This poem just tries to point out the impact of misunderstanding and ego.
எனக்கு புரியாமல் இல்லை.. ஆனால் உன்னை பற்றி உனக்கே தெரியாத சில விசயங்கள் மற்றவருக்கு தெரிந்திருக்கும் வாய்ப்பும் உள்ளது.. அவற்றை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும் போதும் இந்த எண்ணங்கள் வரலாம்..
:-)
Exactly !! The misunderstanding and ego that I talked about are in both sides.. கவிதையில் வருகின்ற "நான்" எப்பொழுதுமே ஒரு hero-வாக சரியானதையே செய்பவனாக இருக்க வேண்டியதில்லை :) இக்கவிதையில் வரும் "நான்" compromise செய்து கொள்ள மறுக்கிறான்; "நீங்கள்" அவன் சொல்ல வருவதை கேட்க மறுக்கிறீர்கள் - you dont want to listen.
சரி போகட்டும்
நீங்கள் அறியாத என்னை
நான் விளக்கிச் சொல்லவா என்றால்
நான் அறியும் என்னைவிட
நீங்கள் அறியும் நான்
உங்களுக்குச் சரியாக இருப்பதே
எனக்கு நல்லது என்ற அறிவுரை சொல்லி
புறப்பட்டு விடுகிறீர்கள்.//
கணேஷ், அருமை டா!!! உன் கவிதைகளை படிக்கும் பொழுது தமிழ் மேலும் சுவை கூடித்தெரிகிறது!!
உன் விசிறி - ஜனா!
அருமையான கவிதை நண்பரே.. மிக அருமை..
நீங்கள் எழுதியிருப்பதுதான் உண்மையும் கூட..
நம் சுயத்தை நாமன்றி வேறு யாரறிவார்..
அறிந்து கொள்ளவும் இங்கு எவருக்கும் விருப்பமுமில்லை.. தேவைகளுமில்லை..
Post a Comment