Thursday, March 22, 2007

வெற்றிடம்

எதுவுமே இல்லையென்றாலும்
எதுவுமாகவும் இருக்கலாம் என்பதால்
சாத்தியங்களால் நிறைந்திருக்கும் வெற்றிடத்தில்
இது தான் எனவொன்று வந்த பின்னும்
முகம்வாடி வெளியேறிப்போகும்
அதுவல்லாத அனைத்திற்காகவும்
ஏங்கித் தவித்து தூக்கம் கெட்டவன்
இதுவென்றதும் இல்லாதாகி
எதுவுமே என்றுமே இருக்க முடியாத
வெற்றிடங்களால் நிறைந்த வெற்றிடத்தில்
ஐயோ பாவம் தொலைந்து போனான்.

/22nd March, 2007

2 comments:

AKV said...

ஐயோ ! பாவம் !.. இப்படி வெற்றிடமாய் அவனும் தொலைந்து போய் விட்டானே.. !!!

AKV said...

வார்த்தைகளில் விளையாடுவது கை வந்த கலையாகிப் போய்விட்டது உனக்கு.. excellent combination of words.. Keep going !