விழுந்த மழைத்துளிகள்
மேகம் சேர்ந்து
மீண்டும் கலைகின்றன
பூக்கள் குவிந்து மொட்டாகி
கிளையோடு விதைக்குள்
புதைகின்றன
எழுதிவைத்த என் கவிதையும்
விரல்வழி புகுந்து
மூளைக்குள் மிச்சமின்றி
தொலைந்து விட
நான் மட்டும்
இன்னும் இருக்கின்றேன்
என்றேனும் உன் கவிதையோடு
நீ இங்கு வரக்கூடும்
மண்வாச மழையோடு
பூங்காடு நனையக்கூடும்
/9th Jan, 2007
5 comments:
இருத்தலும், மறு நொடி இல்லாமல் போதலும், சில நிகழ்வுகளுக்காய் காத்திருத்தலும் ஒரு மெல்லிய ஏக்கமும் இயலாமையும் கவிதையில் பளிச்சிடுகின்றன. நம்பிக்கை இழையோடும் கடைசி வரிகள் அருமை. Database rollback commit ellam nyabagam varudhunga... :)
என்றேனும் உன் கவிதையோடு
நீ இங்கு வரக்கூடும்
மண்வாச மழையோடு
பூங்காடு நனையக்கூடும்//
கணேஷ், அருமை!மிகவும் அருமை!!
Ganesh..
Indha kavidhai vazhiyaga, aazhntha manathil uranggik kidakkum melliya unarvukalai thatti yelluppi vaedikaai paarpaathu sariyillai..
Badly trying to behave "tough"..
:-)
//பூக்கள் குவிந்து மொட்டாகி
கிளையோடு விதைக்குள்
புதைகின்றன//
செமயா இருக்குங்க இந்த கற்பனை!!
விழுந்த மழைத்துளிகள்
மேகம் சேர்ந்து
மீண்டும் கலைகின்றன
பூக்கள் குவிந்து மொட்டாகி
கிளையோடு விதைக்குள்
புதைகின்றன
எழுதிவைத்த என் கவிதையும்
விரல்வழி புகுந்து
மூளைக்குள் மிச்சமின்றி
தொலைந்து விட
நான் மட்டும்
இன்னும் இருக்கின்றேன்
எல்லாமும் இப்படி பின்னோக்கி நகருமானால் மிக நன்றாகயிருக்குமே என்ற ஆற்றாமை என்னை அசைக்கிறது..
Post a Comment