இந்த மழைக்காலத்திலும்
மின்விசிறி சுழலும் சத்தமில்லாமல்
உறக்கம் வருவதில்லை எனக்கு.
கனத்த போர்வையை சுற்றிக்கொண்டு
தேநீர் சுவைத்தபடியே பார்க்கிறேன்
என் கண்ணாடி ஜன்னல் வெளியே
மெளனமாகப் பெய்கிறது மழை.
இன்னும் வேகமெடுத்து
மரங்கள் ஆடும் மழைத்தாண்டவம்
என் ஜன்னலில் தெறித்த துளிகள்
நெளிந்து வடிகையில் அழகாய் சிதைகிறது.
குளிரும் கதகதப்பும் சேர்ந்த கலவையில்
உற்சாகம் பொங்க
"மழையே மழையே"
என்று நான் தொடங்கும் இக்கவிதையை
ஒழுகும் குடிசையில் நடுங்கும் தன் பிள்ளைகளை
கைகொண்டு பொத்திக் காக்கும்
எவளும் இரசிக்கப் போவதில்லை.
/31st Oct, 2007
9 comments:
மழையே மழையே"
என்று நான் தொடங்கும் இக்கவிதையை
ஒழுகும் குடிசையில் நடுங்கும் தன் பிள்ளைகளை
கைகொண்டு பொத்திக் காக்கும்
எவளும் இரசிக்கப் போவதில்லை.
Superb ending
சிலிர்ப்பாய் துவங்கி கனமாய் முடிந்திருக்கிறது. மறுமுறை மழை ரசிப்பேனா என்று தெரியவில்லை :(((
நல்ல கவிதை.
இறுதி வரியில் நெஞ்சைத் தொட்டுவிட்டது உங்கள் கவிதை. வாழ்த்துகள்.
என்ன நீங்கள்... நான் நேற்று யோசித்ததை கவிதையாகப் போட்டிருக்கிறீர்கள்:) சத்தியமாக நினைத்தேன்... இந்த மழை இத்தனை அழகாகப் பெய்கிறதே... குடிசைக்குள் வெள்ளம் நிரம்பி வழிந்தோட உறங்கவும் முடியாமல் உட்கார்ந்திருக்கும் ஏழைக் குடும்பத்தின் பார்வையில் இந்த மழை என்னவாக இருக்கும் என்று...
உண்மைதான்..
"மழையே மழையே"
என்ற உங்கள் கவிதையை
ஒழுகும் குடிசையில் நடுங்கும் தன் பிள்ளைகளை
கைகொண்டு பொத்திக் காக்கும்
எந்த பெண்ணும் இரசிக்கப் போவதில்லை.
மிகவும் எதார்த்தமாக உள்ளது.. :(
நல்ல கவிதை.
அனுஜன்யா
நண்பர் சரவணகுமாரின் வழிகாட்டுதலில் இங்கு வந்தேன். கவிதை அருமை நண்பரே :)
Post a Comment