Saturday, June 16, 2007

கால ஓட்டம்

தலைதெறிக்க ஓடிவந்து
என் நிகழ்கால அறையின்
கதவு ஜன்னல்களை
கலவரத்தோடு தாளிட்டுக் கொண்டு
வியர்வை வழிய
சாய்ந்து அமர்கின்றேன்.

சற்றும் பாதுகாப்பாய் உணர்வதற்குள்
இருளாய் அறையெங்கும் வியாப்பித்து
இரை கண்ட மிருகம் போல்
என்னை உற்றுப் பார்க்கிறது
இன்னும் இறந்து போகாத
இறக்க மறுக்கும்
இறந்த காலம்.

/16th June, 2007

2 comments:

AKV said...

இந்த ஓட்டத்திற்கு முடிவில்லை நண்பரே !!!.. பூமியின் ஓட்டம் நின்று விட்டால் ஜீவராசிகள் இல்லை.. ஓட்டம் என்பது பிரபஞ்சத்தின் நியதி.

இனி செய்ய வேண்டியவை என்ன என்பதிலேயே நாட்டம் இருக்க வேண்டும்.. அதன் பொருட்டே உன் ஓட்டமும் இருக்க வேண்டும்..

:-)

காயத்ரி சித்தார்த் said...

கடவுளே!! லேசாய் அதிர வைத்து புன்னகை பூக்க வைத்தது இந்த கவிதை... இந்த பக்கங்களை கவனிக்காமல் இருந்திருக்கிறேனே இத்தனை நாள்.. :(