கிடைத்ததெல்லாம் பற்றிக்கொண்டு
ஆக்ரோஷமாய் திமிறி எரிகிறது
என்னுள் எப்போதுமொரு தீக்காடு.
நான் நடந்து செல்லும் அதிர்வினில்
புலம்பெயர்ந்து பறக்கின்றன
என் மரத்துப் பறவைகள்.
என் சிரிப்பொலியின் எக்காளம்
கேட்போர் செவிப்பறையில்
ஓங்கி அறைகிறது.
என் அழுகுரலின் கேவல்கள்
இருள்வெளியெங்கும் நிறைந்து
ஓலமிட்டுத் தவிக்கின்றன.
நான் பயணிக்கும் பாதையில்
என் பாதச்சுவடுகள் மட்டுமே
பின் தொடர்கின்றன.
என்றாலும்
தணிந்து கனிந்து நிறைந்து
தூயசுடராய் நிமிர்ந்தொளிர்ந்து
உங்களை நான் வரவேற்க்கும்
காலம் வரும்.
/1st Feb, 2007
3 comments:
கணேஷ், இந்த கவிதை நெருப்பை பற்றியதா இல்லை மனதில் எழும் எண்ணத்தீகணைகளா.....அன்பனுக்கு விளக்கவும். - ஜனா
Jana,
This poem is about a restless mind, feeling incomplete and hoping for a better tomorrow.
-Ganesh.
Hmm... Andha kaalam viraivil vara virumbi kaathirukkiraen.. :-)
Post a Comment