சுகிக்க துணையாய் ஒரு பெண்தேகம்
புசிக்க சுவையாய் நல்உணவு
சேவிக்கும் நிர்பந்தத்தில் சுற்றி நாலு பேர்
இவையெல்லாம் பெற்று
முகமே இல்லாத
முதுகெலும்பில்லாத
உயிரினம் ஒன்று
ஊர்ந்து என்வழி செல்லக் கண்டு
தேகம் அதிர்ந்து போனேன்.
எப்படி எல்லாம் சாத்தியம் ஆனது
நீ மனிதனே தானா
என்று கேட்டேன்.
திருமணச்சடங்குகள் முற்றும் ஒப்பித்து
கதகதப்பாய் தன் மேல் சுற்றிக் கிடந்த
பழைமைப் போர்வையை சிறிது விலக்கி
'நான் ஆண்மகன்' என்று
பல்லைக் காட்டிச் சிரித்தது.
/23 Feb, 2007
1 comment:
அதிர்வூட்டும் கவிதை. நியாயமான சலிப்பும் "இவ்வளவு தானா நீ" என்னும் கோபமும் நன்கு வெளிபட்டிருக்கிறது. பெண்ணாய் இருந்து சாடுவதை விடவும் சக ஆணை பற்றிய சிந்தனை ரசிக்கும்படியாய் இருக்கிறது.
Post a Comment