ஞானச்செறுக்கேறி சித்தனாய் பித்தனாய்
காடூடே போனவனும்
மேலான பொருள் தேடும் வேட்கையோடு
பேரண்டம் புரட்டிவிடப் புறப்பட்டவனும்
மோகம் வழிந்தோடும் மெல்லிரவில்
சதைப்பிண்டம் குத்தித் தின்று
போதை தலைக்கேறும் உச்சத்தில்
சித்தாந்தக் கூவலோடு சரிந்தவனும்
உண்டு கழித்துறங்கி வேறொன்றும் உணராமல்
மந்தைக்குள் பயமின்றி ஒளிந்திருக்கும் மூர்க்கனும்
மிக உரிமையோடு சிதைக்கக்கூடும்
முன்பொருநாள்
குருவிகள் வந்தமரும் மரக்கிளையில்
அண்ணாந்து ஊஞ்சலாடும்
சின்னப்பெண்ணொருத்தி
சிருஷ்டித்த கனவுகளை.
/6th Jan, 2009
3 comments:
அட்டகாசம்..
ரொம்ப காலம் கழிச்சி வந்து ஒரு கவிதை பதிவு எழுதி இருக்கீங்க.. நானும் ரொம்ப நாள் கழிச்சி வந்து படிக்கிறேன்..
இனி அடிக்கடி கவிதை பதிவிடவும்..
I know you, Don't I?
http://aalapana.blogspot.com
Post a Comment