எளிதாக எட்டும் இடத்தில்
இதயம் இல்லை
கண்டு அறிகின்ற விதமாய்
அதன் காயம் இல்லை
புரிகின்ற மொழியில்
அதன் ஓலம் இல்லை
என்றாலும்
மருந்திடும் கரங்கள் வேண்டி
ஏங்காமல் எவரும் இல்லை
-ganeshkj
When Life does not find a singer to sing her heart, she produces a philosopher to speak her mind - Kahlil Gibran
எளிதாக எட்டும் இடத்தில்
இதயம் இல்லை
கண்டு அறிகின்ற விதமாய்
அதன் காயம் இல்லை
புரிகின்ற மொழியில்
அதன் ஓலம் இல்லை
என்றாலும்
மருந்திடும் கரங்கள் வேண்டி
ஏங்காமல் எவரும் இல்லை
-ganeshkj
மாறாத பேரன்பில்
மன்னிக்கும் கருணையில்
உள்ளங்கை கதகதப்பில்
உச்சிமுகரும் பெருமிதத்தில்
கண்பார்வையின் நிழலில்
கண்டிக்கும் அக்கறையில்
வழிநடத்தும் பிரார்த்தனையில்
வலி ஆற்றும் புரிதலில்
வாழ்ந்துவிடுவதைத் தவிர
வேறென்ன உன்னதம்
வாய்த்துவிடும்
இந்த வாழ்க்கைக்கு
வளர்த்து ஆளாக்கி
பேரன் பேத்திகள் பார்த்து
ஆடி அசந்து
நடைதளர்ந்து
நினைவுகளை அசைபோட்டு
உயிர்க்கும் போதும் -
வாழ்வில் நிகழாமலே போய்விட்ட
காதல் வந்து
கண்கள் கசக்கும்
பொங்கும் பெருமூச்சின் அனற்காற்று
யாரும் காணாமல் அவசரமாய்
கண்ணீர் உலர்த்தும்
-ganeshkj